இந்தி படங்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் படங்களுக்கும் மார்க்கெட் எல்லை உலக அளவில் விரிவடைந்திருக்கிறது. அமிதாப், ஷாருக்கான், சல்மான், ஆமிர்கான் போல் ரஜினி, கமல், விஜய், அஜீத் நடித்த படங்களுக்கு அமெரிக்க தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் கணக்குகள் ரிலீஸின்போதே இணைய தளத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்நிலையில் கோலிவுட், பாலிவுட் ஹீரோக்களுக்கு இடையே ஒரு நட்பு பாலமும் உருவாகி இருக்கிறது.ஸ்ரீதேவி இந்தியில் நடித்த ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தில் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
அதுபோல் அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தார். நட்பையடுத்து போட்டியும் சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் ஷாருக்கானின் ‘ஃபேன்’, விஜய்யின் ‘தெறி’ படம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே 2000 ம் ஆண்டு அக்டோபரில் ‘பிரியமானவளே’, ‘மொஹபத்தே’, 2007 நவம்பரில் ‘அழகிய தமிழ் மகன்’, ‘ஓம் சாந்தி ஓம்’, 2011 அக்டோபரில் ‘ரா ஒன்’, ‘வேலாயுதம்’ என ஒரே நாளில் ஷாருக்-விஜய் படங்கள் வெளியாகியுள்ளன.