Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
04
Mar
நடிகரிடம் கதை கேட்கும் வெங்கட்பிரபு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுப்பு பஞ்சு. பல்வேறு படங்களை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பஞ்சு அருணாசலத்தின் மகனான இவர் தற்போது நடிப்பதுடன் கதையும் எழுதுகிறார். இதுபற்றி அவர் கூறியது:பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிகராக அறிமுகமானேன். காமெடி, குணசித்ரம், வில்லன் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது தந்தை நிறைய படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார். அதுபோல் நானும் கதை எழுதி வருகிறேன். நான் எழுதும் கதையை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க கேட்டிருக்கிறார்.

தற்போது வெங்கட்பிரபு, ‘சென்னை 28’ இரண்டாம் பாகம் இயக்க தயாராகி வருகிறார். முதல்பாகத்தில் நடித்தவர்களுடன் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். தொலைகாட்சி, ஜெமினி கணேசன், நட்பதிகாரம் 79, மருதாண்ட சீமை உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடிக்கிறேன். கதையின் நாயகனாகவும் நடிக்க வாய்ப்பு வருகிறது. எல்லா ஹீரோயின்களுடனும் ஜோடி போடவும் ஆசை இருக்கிறது. ரஜினி, கமலை வைத்து எனது தந்தை படங்கள் தயாரித்து இருக்கிறார். மீண்டும் அவர் படங்கள் தயாரிப்பார்.  இவ்வாறு சுப்பு பஞ்சு கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement