நம்மூரில் உள்ள பதன்கோட்டில் விமான படை தளத்தில் அண்மையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் முக்கியமான விமான படைத்தளங்களில் இதுவும் ஒன்று. நம்மூர் கதை இருக்கட்டும். இங்கிலாந்தை பார்ப்போம். அங்குள்ள யோக்ஷயர் மாகாணத்தில் அமைந்துள்ள விமானபடை தளம் தனிசிறப்பு வாய்ந்தது. மட்டுமன்றி உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு மையங்களில் முதன்மையானது. இதை இங்கிலாந்து, அமெரிக்க அரசுகளின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையாக செயல்பட்டு வருகிறது. முன்பு சோவித் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது இந்த மையம். தற்போது உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள், போதை கடத்தல்காரர்கள் உள்ளிட்டோரை கண்காணிப்பதற்காக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தின் செயல்பாட்டில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் கூட்டு சேர்ந்திருப்பதாக ஒரு கேள்வி. அது சரி, இந்த மையத்தில் அப்படி என்னதான் பணி நடக்கிறது. உஸ்... அது மட்டும் சஸ்பென்ஸ். ராணுவ ரகசியம் ஓகேயா.