சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 86வது சர்வதேச வாகன கண்காட்சி பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 200க்கும் மேற்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியை மக்கள் கண்டுரசிக்கும் வகையில், 10 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாகனமும் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டவை. பாதியளவில் பாகங்கள் தெரியும்படியும், பாதியளவு மூடப்பட்டும் வைக்கப்பட்டிருந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நூற்றாண்டு பழமைவாய்ந்த கார்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.