விவசாயம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், விவசாயம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. விளைநிலங்கள் விற்கப்பட்டு வருகிறது. முதுகெலும்பான விவசாயத்தை மேம்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகர்புறங்களில் மாடி தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த ஜென் பிரைமார்க் என்பவர் 75,000 சதுர அடியில் மாடி தோட்டம் அமைத்துள்ளார். இதில் கீரை வகைகளை பயிரிட்டுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய மாடி தோட்டம் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் மக்கள் பார்வைக்காக இந்த தோட்டம் திறந்து விடப்பட்டுள்ளது.