திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காக்களூரில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் கே.திராவிடபக்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், மா.ராஜி, ஜெய் மதன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார்.கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரையாற்றினார். இதில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் உழைத்த நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிப்பது, மே 19ம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமது மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெருங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள பூத்களில் நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, மோ.ரமேஷ், டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ரவிக்குமார், தி.வே.முனுசாமி, அயப்பாக்கம் துரை வீரமணி, கே.அரிகிருஷ்ணன், சி.சு.ரவிசந்திரன், எஸ்.மகாலிங்கம், டி.கிறிஸ்டி, ஜி.ராஜேந்திரன், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, மீ.வே.கருணாகரன், நா.ஜெகதீசன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், எஸ்.மூர்த்தி, ப.சிட்டிபாபு, காளம்பாக்கம் பன்னீர்செல்வம், தி.ஆ.கமலக்கண்ணன், ஜெ.சங்கர், வி.சி.ஆர்.குமாரன், ஆ.இஸ்ரேல், டில்லிபாபு (எ) அசோக்குமார் ஆர்.ராஜா, வி.திருமால், பொன் ஜி.விமல்வர்ஷன், த.எத்திராஜ், டி.டி.தயாளன், பி.கே.நாகராஜ், ஈக்காடு கே.முகமது ரஃபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.