ரீமேக்கில் நடிப்பது யார்? விஷால் - சிம்பு போட்டி
ஜூனியர் என்டிஆர் தெலுங்கில் நடித்த ‘டெம்பர்’ பட தமிழ் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாகவும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க விஜய் சந்தர் இயக்குவதாகவும் கூறப்பட்டது. நேற்று இப்படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. அப்போது, ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கில் விஷால் ஹீரோவாக நடிக்க மது தயாரிப்பதாக தகவல் பரவியது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மது கூறும்போது, ‘தெலுங்கில் ‘டெம்பர்’ படத்தை கணேஷ் தயாரித்தார். அவருடன் இணைந்து தமிழில் இப்படத்தை ரீமேக் செய்கிறேன். விஷால் ஹீரோ. மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது. ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார்.
இது பற்றி சிம்பு பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறும்போது, ‘டெம்பர் தமிழ் ரீமேக் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் நாங்கள் வெளியிடவில்லை. சிம்பு, விஜய்சந்தர் இணையும் படம் உருவாகிறது. இதில் டெம்பர் உள்ளிட்ட 3 படங்களில் ஏதாவது ஒன்றை ரீமேக் செய்வது அல்லது விஜய் சந்தரின் புதிய ஸ்கிரிப்ட்டை படமாக்குவது என்று ஆலோசித்து வந்தோம். இதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. டெம்பர் ரீமேக்கில் வேறு யாராவது நடித்தால் அதுபற்றி பரவாயில்லை. நாங்கள் வேறு ஸ்கிரிப்ட் உருவாக்குவோம். இதில் பிரச்னை எதுவும் இல்லை’ என்றார்.