‘விலகி போங்கள்’ ஆண்ட்ரியா கோபம்
பொது நிகழ்ச்சிகளில் ஆண்ட்ரியா பங்கேற்பது குறைவு. தான் நடிக்கும் பட புரமோஷன் அல்லது தனது சொந்த ஆடியோ ஆல்ப வெளியீடு நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதுண்டு. நெருக்கமான நண்பர்களுடன் சில சமயம் பார்ட்டியில் பங்கேற்கிறார். இளைஞர்கள் சிலரின் சக்சஸ் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார் ஆண்ட்ரியா. சிக் உடையில் வந்திருந்த தன்னை போட்டோ எடுக்க புகைப்படக்காரர்கள் முயன்றபோது அவர்களை தடுத்தார் ஆண்ட்ரியா. ‘என்னை யாரும் போட்டோ எடுக்காதீர்கள் எல்லோரும் விலகிப்போங்கள்’ என்று சத்தம்போட்டார். எதற்காக கோபப்படுகிறார் என்று தெரியாமல் போட்டோகிராபர்கள் வெறுப்படைந்தனர். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினார்கள்.