பெரம்பலூரில் நடந்த விபத்தில் சென்னை போலீஸ்காரர் பலி
பெரம்பலூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திம்மநாயக்கனூரை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் சிவசங்கர்(25). இவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவலர் பிரிவில் 2-ம் நிலை காவலராக வேலை பார்த்தார்.சிவசங்கரின் பாட்டி வெள்ளையம்மாள் இறந்து விட்டதால் இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தனது பைக்கில் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்னைக்கு வந்தார்.பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது பைக் மீது ஒரு வாகனம் மோதியது. இதில் சிவசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த சிவசங்கருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.