ஆதனூர் திமுக சார்பில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: தமிழ்அமுதன் வழங்கினார்
கூடுவாஞ்சேரி,: கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி கழக செயலாளரும், கிளாசிக் நிறுவன தொழிலதிபருமான தமிழ் அமுதன், குன்றத்தூர் ஒன்றிய திமுக மகளிரணி செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழி தமிழ் அமுதன் ஆகியோர் தலைமையில் கட்சிக்கொடிகளை ஏற்றிவைத்து லட்டுகள் வழங்கினர்.
பின்னர், அப்பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் பெண்களுக்கு சேலைகளும், விழாவில் கலந்து கொண்ட 3 ஆயிரம் பேருக்கு தொழிலதிபர் தமிழ் அமுதன் பிரியாணி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன், ஆதனூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஆதனூர் டிடிசி நகர் போக்குவரத்து கழக பொதுசெயலாளர் வீரராகவன், திமுக கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், ராமதாஸ், பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, சர்வேசன், இளங்கோ, செல்வமணி, வெங்கடேசன், பழனி, ஊராட்சி மகளிரணி நிர்வாகிகள் செல்வி, விஜயா, தாமரைசெல்வி, ஜாகிராபேகம், வார்டு உறுப்பினர் கல்பனா ராஜேந்திரன், ரஜினி, இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.