அதிமுகவுக்கு ‘6’ ஆகாது அதனால் தேர்தலில் தேறாது?
திருமங்கலம்,: தேர்தலில் பல சென்டிமென்ட்கள் உண்டு. அதிலும் ‘6’ என்ற எண் மீது அதிமுகவினருக்கு அதிக அலர்ஜி உண்டு. ஏன் இப்படி? எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1986ல் உள்ளாட்சி தேர்தல் (மாநகராட்சி தவிர்த்து) நடந்தது. அதுவரை சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பல வெற்றிகள் கண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் பலத்த தோல்வியை கண்டது. பல நகராட்சிகள் மற்றும் யூனியன்களில் திமுக வெற்றி கண்டது. பின்னர் 1991ல் முதல்முறையாக ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியை பிடித்தது. பின்னர் 1996ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, அதிமுக படுதோல்வி கண்டது.
தொடர்ந்து 2001ல் வென்ற அதிமுக, 2006 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. மீண்டும் 2011ல் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் 2016ல் சட்டமன்ற தேர்தல் வந்துள்ளது. பொதுவாக 6ல் முடியும் ஆண்டில் வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது. இம்முறையும் (2016) ஆண்டில் 6 வருவதால் தோல்வியடைந்து விடுவோமா என்ற அச்சத்தில் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.