ரிலீஸ் கணக்கு பார்க்கிறார் ஸ்ருதி ஹாசன்
கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே ‘புலி’, ‘வேதாளம்’ என 2 படங்கள் மூலம் தமிழில் தனது படம் ரிலீஸ் ஆகி கணக்கு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு தொடங்கி 2 மாதம் ஆகியும் பட ரிலீஸ் இல்லாததால் ஸ்ருதிஹாசன் வருத்தத்தில் இருந்தார். அவரது வருத்தத்தை போக்கும் விதமாக தெலுங்கில் அவர் நடித்த ‘பலுப்பு’ படம் தமிழில் ‘எவன்டா’ பெயரில் இம்மாதம் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரவி தேஜா ஹீரோ. அஞ்சலி மற்றொரு நாயகி. பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வின்சென்ட் ஒளிப்பதிவு. எஸ்.எஸ்.தமன் இசை. பத்ரகாளி பிரசாத் தயாரிக்கிறார். கோபி சந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். ‘காமெடி கலந்த ஆக்ஷன் படமான இதில் 5 சண்டை காட்சிகள் இடம்பெறுவது ஹைலைட்’ என வசனகர்த்தா ஏஆர்கே.ராஜராஜா கூறினார்.