சொந்த குரலில் பாட அஞ்சலி பயம்
நான் நன்றாக பாடுவேன் என்று சில ஹீரோயின்கள் வெளிப்படையாக சொல்வதுண்டு. பாடியும் நிரூபித்திருக்கிறார்கள். பாட ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தவர் அஞ்சலி. ‘பேரன்பு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்ற அஞ்சலி ஹம்மிங் செய்தபடி இருந்தார். இதை கவனித்த இயக்குனர் அசோக் ‘சொந்த குரலில் பாடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்றார். அதற்கு பிடி கொடுக்காமல் நழுவினார் அஞ்சலி. விஷயத்தை இசை அமைப்பாளர்களிடம் சொன்ன இயக்குனர், ‘அஞ்சலியின் குரல் மெலடிக்கு பொருத்தமாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்’ என்றார்.
ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரும்படி இயக்குனர் அஞ்சலியை அழைத்தார். எதற்காக அழைக்கிறார் என்று தெரியாமல் சென்றார் அஞ்சலி. அவரிடம் பாடல் வரிகளை கையில் கொடுத்து, ‘நீங்கள் பாடுங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். நன்றாக இருந்தால் பயன்படுத்துவோம்’ என்றார். சொந்த குரலில் நான் பாட்டு பாடுவதா? என்று பயந்த அஞ்சலி, அங்கிருந்து புறப்பட தயாரானார். அவரை சமாதானப்படுத்தி பாட வைத்தார் இசை அமைப்பாளர்.