ரெஜினா ரகசிய நிச்சயதார்த்தம்? ரசிகர்கள் குழப்பம்
10/21/2016 2:22:18 PM
பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற போக்கில் சில ஹீரோயின்கள் டாப் லெஸ் போஸ், காதல் கட்டுக்கதைகள், திருமணம் நடந்துவிட்டதுபோன்ற தகவல்களை பரப்பி விடுகின்றனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா நடிகை ரெஜினா, தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாக வந்தன. இதையடுத்து கிளாமர் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். பொது நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி உடையில் வரத் தொடங்கினார்.
சில தினங்களுக்கு முன் ரெஜினா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். நிச்சயதார்த்த தினத்தில் மோதிரம் மாற்றிக்கொள்வதுபோன்று காட்சி இடம்பெற்றிருந்தது. அருகே வெளியிட்ட மெசேஜில், ‘இந்நன்நாளில் உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனக்கு தேவை. எனக்கு மோதிரம் அணிவிப்பது யார் என்பது விரைவில் உங்களுக்கு தெரியவரும். அவரை காண்பதற்காக உங்களை காக்க வைக்க மாட்டேன்’ என குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை டுவிட்டரிலிருந்து நீக்கினார். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
டோலிவுட் நடிகர் சாய் தரம் என்பவரை ரெஜினா காதலித்தார். அது பிரேக் அப் ஆனது. மீண்டும் அவருடன் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தத்தில் முடிந்துவிட்டதாக சிலர் கூறினாலும், இது ரெஜினா நடிக்கும் ஏதோவொரு பட காட்சி. பப்ளிசிட்டிக்காக இப்படி ஸ்டண்ட் செய்வதாக சிலர் தெரிவிக்கின்றனர்.