இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நயன்தாராவுக்கு முக்கியத்துவம்? அதர்வா அச்சம்

9/30/2016 2:24:35 PM
காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு தண்ணீர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கர்நாடக சட்டசபையில் விவாதம் உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன


ஹீரோக்களுக்கு ஜோடிபோடும் கதாபாத்திரங்களைவிட ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களையே சமீபகாலமாக தேர்வு செய்கிறார் நயன்தாரா. மாயா, நானும் ரவுடிதான் என அவர் நடித்த பல படங்களும் அடுத்தடுத்து நடிக்கும் படங்களும் இந்த பாணியிலேயே அமைந்திருக்கிறது. அதர்வா ஹீரோவாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவரை அழைத்து கதை கேட்டு நடிக்க ஓ.கே சொன்னார் அதர்வா. ஜோடியாக ராசி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.

துப்பறியும் அதிகாரி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபுதேவா உள்ளிட்ட சிலரிடம் பேசப்பட்டது. கடைசியாக நயன்தாராவிடம் கதையை கூறியபோது நடிக்க சம்மதித்தார். ஏற்கனவே சண்டை காட்சிகளில் நடிக்க நயன்தாரா பயிற்சி பெற்றிருப்பதால் இது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவும் எண்ணியது. அவர் நடிக்க சம்மதித்தவுடன் படம் பற்றிய தகவல்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதாம். அதர்வாவுக்கு ஜோடியாகவும் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் அதர்வாவுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அவருக்கு இப்படத்தை அதர்வா படம் என்று சொல்வார்களா? நயன்தாரா படம் என்று சொல்வார்களா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். அக்டோபரில் இதன் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் குழப்பத்துக்கான தீர்வை எட்ட பட குழுவினர் ஆலோசித்து வருகிறார்களாம்.

மேலும் சில
  • வரலட்சுமி காதல் முறிவு? டுவிட்டர் பதிவால் பரபரப்பு



  • வாரிசுக்காக இசை அமைப்பாளர் வீட்டின் கதவை தட்டிய நடிகர்



  • புரட்சி செய்ய ஆசையா இருக்கு, பயமாவும் இருக்கு... - நடிகரின் வாக்குமூலம்



  • டாப்ஸியின் டாட்டூவுக்கு மவுசு கியூவில் நிற்கும் இளம்பெண்கள்



  • டைரக்டர், தயாரிப்பாளர் பிடிச்சாதான் நடிப்பேன் - சொல்கிறார் ஆஷ்னா சவேரி



  • ₹10 லட்சம் ரூபாய்க்கு விற்ற சினிமா டிக்கெட் - கோலிவுட் ஸ்டார்கள் அதிர்ச்சி



  • பெப்பர்-சால்ட் லுக்கிற்கு மாறும் ஹீரோக்கள்



  • தயாரிப்பாளர் ஆன ஜெனிலியா



  • ரித்விகாவ லவ் பண்றியா? - இளம் நடிகரை கலாய்த்த ஃபிரண்ட்ஸ்



  • முருங்கைகாய் மேட்டரில் கூடுதல் ‘சமாச்சாரம்’ - மீண்டும் ‘பட்டாசு’ கிளப்பும் பாக்யராஜ்



Facebook

Twitter

வரலட்சுமி காதல் முறிவு? டுவிட்டர் பதிவால் பரபரப்பு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]