உள்ளாட்சி தேர்தலில் போட்டி உத்திரமேரூரில் திமுக விருப்ப மனு
9/21/2016 3:24:49 PM
உத்திரமேரூர், -உள்ளாட்சி தேர்தலில் உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு தாக்கல் உத்திரமேரூரில் நேற்று நடந்தது.இதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்த விருப்ப மனு பெறுவதை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் வரவேற்றனர். நிர்வாகிகள் நாகன், அப்பாதுரை, துரைவேல் ஆகியோர் உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் திமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, பேரூர் செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்ைபயா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.