இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் - ராகுல் காந்தி குற்றம் சாட்டு

9/21/2016 3:20:46 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

கான்பூர், -  உரியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். உத்தரப் பிரதேசத்தில் கிஷான் யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, கான்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது: உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு முதல் காரணம், பாகிஸ்தான் அரசு ஆகும்.  இரண்டாவதாக, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் அரசியலும்,  இந்தத் தாக்குதலுக்கு காரணமாகும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, காஷ்மீரில் 9 ஆண்டுகள் போராடி பயங்கரவாதத்தைக்  கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரை ஆளும் பாஜக-பிடிபி  கூட்டணி, அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு இடமளித்து விட்டது.
நான் சில மாதங்களுக்கு முன்பே மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம், ‘காஷ்மீரில் நீங்கள் பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறீர்கள்’ என்று கூறினேன். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தெளிவான கொள்கை கிடையாது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை.இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.


மேலும் சில
  • ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல்



  • ரயில்வேயில் இந்தி பயன்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க அதிகாரி நியமனம்



  • ‘‘என்னை பிரதமராக்குங்கள்’’ - ஆசம்கான் காமெடி



  • ஆந்திர புதிய தலைநகர் அமராவதி அக்.3ம் தேதி தொடக்கம்



  • 92 ஆண்டு வரலாறுக்கு முற்றுப்புள்ளி ரயில்வே பட்ஜெட் இனி இல்லை - நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு



  • காவிரி பிரச்னை தமிழக-கர்நாடக பஸ்கள் 17வது நாளாக முடக்கம்



  • காவிரி மேலாண்மை வாரியம் தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பரிசீலனை



  • மும்பை டான்ஸ் பார்களில் மது விற்க தடையில்லை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ‘எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை’ - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்



  • மூணாறு மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்தது - செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் படுகாயம்



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]