மனைவி, மைத்துனருக்கு கட்டை அடி
9/21/2016 3:16:56 PM
கூடுவாஞ்சேரி, -சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் கிருஷ்ணாபுரம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை குடித்துவிட்டு வந்த மனைவியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் புவனேஸ்வரியின் தம்பி கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தியை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் புவனேஸ்வரி, கார்த்திகேயனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.