கான்ஸ்டன்டைன்-சோப்ரா டிஷ்யூம்...டிஷ்யூம்...
9/21/2016 3:10:03 PM
ஜுனியர் கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர் மைக்கேல் சோப்ரா. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், இந்திய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன் இதற்கு தடையாக உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், மைக்கேல் சோப்ரா இந்தியாவுக்காக விளையாடுவது எப்போதும் நடக்காது. அவருக்கு தற்போது 32 வயதாகி விட்டது. அவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், அந்த பணிகள் முடியவே 2 ஆண்டுகள் ஆகிவிடும் என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல் சோப்ரா, கான்ஸ்டன்டைனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கான்ஸ்டன்டைன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கு அது ஒரு பிரச்னையே அல்ல. ஒரு வீரராக அவர் போட்டியில் சாதித்துள்ளாரா? இல்லை. ஒரு பயிற்சியாளராகவும் அவர் எதையும் சாதிக்கவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஐஎஸ்எல்-3 சீசனில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக மைக்கேல் சோப்ரா விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.