இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் நாளை துவக்கம் - 500வது போட்டியில் சாதிக்கும் முனைப்பில் இந்தியா

9/21/2016 3:09:08 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை


கான்பூர்:  நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ெடஸ்ட்டில் இருந்து டோனி ஓய்வுக்கு பின்பாக, விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக விளையாடிய 3 தொடர்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்தியாவின் அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி 8 டெஸ்ட்டில் லோகேஸ் ராகுல் 3 சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ெதாடரில் கேப்டன் விராட் கோஹ்லி, தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அஸ்வின் சுழல், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும். இதனுடன் அமித் மிஸ்ரா, சமி, புவனேஸ்வர் குமார் இருப்பதும் பலம்.

 ஆனால் நியூசிலாந்து அணியோ சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஜிம்மி நீஷம், டிம் சவுத்தி உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் விலகியிருப்பதும் நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சிக்குன் குனியா காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார். ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்தியா, வெற்றியுடன் தொடங்க முயலும். அதே சமயம் நியூசிலாந்து அணியும் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
இந்தியாவில் தடுமாறும் நியூசிலாந்து: இந்திய மண்ணில் நியூசிலாந்து தொடர்ச்சியாக தடுமாறியே வருகிறது. இந்தியாவில் இதுவரை 10 தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து, 8 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது. வெற்றி பெற்றதில்லை. மொத்தமாக இந்திய மண்ணில் 31 டெஸ்ட் ேபாட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து, 13 தோல்வி, 16 டிரா கண்டுள்ளது. 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

சாதிக்க காத்திருக்கும் அஸ்வின்:  இந்திய மண்ணில் ெதாடர்ந்து சாதித்து வரும் அஸ்வின், தற்போது 36 ெடஸ்டுகளில் 193 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றும் பட்சத்தில், 200 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய ஆசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ், 38 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
மார்டின் குரோவ் சாதனை உடையுமா?  நியூசிலாந்து சார்பில் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை 17 சதங்களுடன் மார்டின் குரோவ் பெறுகிறார். தற்போது கேப்டன் கேன் வில்லியம்சன் 16, ரோஸ் டெய்லர் 15 சதங்களை அடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மார்டின் குரோவின் சாதனையை இந்த ெதாடரில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
500வது டெஸ்ட்: கான்பூர் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மட்டுமே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 500வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் 4வது அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதனால் இந்த போட்டிக்காக சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. டாஸ் போடுவதற்கு பிரத்யேக வெள்ளி நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு போட்டியை காண அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களின் டி-சர்ட்டில் ‘500வது டெஸ்ட்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். முன்னாள் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். சச்சின், அசாருதீன், காந்த், வெங்கர்ச்சார் ஆகியோர் இதில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். ஆனால் பிஷன் சிங் பேடி, குண்டப்பா விஸ்வநாத் ஆகிய இருவரும் அழைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில
  • கான்ஸ்டன்டைன்-சோப்ரா டிஷ்யூம்...டிஷ்யூம்...



  • பாகிஸ்தானை அழைக்காதது ஏன்? நிருபரிடம் கபில்தேவ் ஆத்திரம்



  • தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடியவர் - இந்திய அணி அஸ்வினை சார்ந்தே உள்ளது ; கபில்தேவ் பாராட்டு



  • விபத்தில் வாலிபர் பலி - நுவான் குலசேகரா கைது



  • ரபேல் நடால், மோ பாராவின் மருத்துவ ஆவணங்கள் ‘லீக்’ - ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டனர்



  • போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன்? பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு; மனம் தளராத குர்ஜார்



  • ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் பெற கடும் போட்டி



  • ரியோ பாராலிம்பிக் நிறைவடைந்தது - 43வது இடம் பிடித்தது இந்தியா



  • பாராலிம்பிக்கில் சாதித்தவர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா?



  • ஐபிஎல்லில் விளையாடியது நம்பிக்கையை அதிகரித்தது - லோகேஷ் ராகுல் பேட்டி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]