பெரியார் பிறந்தநாள் தெருமுனை கூட்டம்
9/21/2016 2:56:30 PM
உத்திரமேரூர், -தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெரியாரின் 138வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி அந்தோணிபால் தலைமை தாங்கினார். ராஜா, பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர்கள் சோழன், சிவா வரவேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, எழுத்தாளர் குமாரசாமி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பெரியாரின் கொள்கைகள் குறித்து விளக்கி பேசப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் 138 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.