கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
9/21/2016 2:56:09 PM
காஞ்சிபுரம், -காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தேவி (20). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 17ம்தேதி காஞ்சிபுரம் பஜார் வீதிக்கு சென்ற தேவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் தேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகிறார்.