பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒன்டே 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
9/2/2025 4:52:07 PM
லீட்ஸ்: இங்கிலாந்து -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 4வது ஒருநாள் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணியின் துவக்க வீரர்கள் ஷமிஅஸ்லாம் 24, சார்ஜல் கான் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமது தலா 12 ரன்னிலும் ஆட்டம் இழக்க ரிஸ்வான் 13 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் அசார் அலி 80 ரன் அடித்தார். 50 ஓவரில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழந்து 247 ரன் சேர்த்தது. இமாத் வாசிம் ஆட்டம் இழக்காமல் 57 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ரஷித் 3, ஜோர்டன், மொயின் அலி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ராய் 14, ஹாலஸ் 8 ரன்னில் ஆட்டம் இழக்க ரூட் 30, கேப்டன் மோர்கன் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 72 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டோக்ஸ் 69, பேர்ஸ்டோவ் 61 ரன் எடுத்தனர். மொயின் அலி ஆட்டம் இழக்காமல் 45 ரன் அடித்தார். இதனால் 48 ஓவரில் 6 விக்கெட் இழந்து 252 ரன் எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 4-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி போட்டி வரும் 4ம் தேதி நடக்கிறது.