இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாயும் அம்பு

7/27/2016 5:23:08 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

லட்சுமி ராணியின் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமாகபட்டது, முதலில் அவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஏனென்றால் மேற்கு வங்க மாநிலம் பகுலாவில் உள்ள லட்சுமி ராணியின் கிராமத்தில், அப்போது பெரும்பாலும் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை. உலக வில் வித்தை அரங்கில் இன்று அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் லட்சுமிராணி, அந்த வாய்ப்பை வழங்கியதற்கு முதலில் பெற்றோருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்றதன் மூலமாகதான் வில் வித்தையை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பே லட்சுமி ராணிக்கு கிடைத்தது.  லட்சுமி ராணி படித்து வந்த பகுலா அரசு பள்ளிக்கு, தேசிய வில்வித்தை பயிற்சியாளர் தர்மேந்திர திவாரி கடந்த 2002ம் ஆண்டு வந்தார். யாருக்கெல்லாம் வில் வித்தையை கற்று கொள்ள ஆர்வம் உள்ளது என்று மாணவ, மாணவிகள் மத்தியில் கேட்டார் தர்மேந்திர திவாரி. உயர்ந்தது ஒரே ஒரு கை தான். அது லட்சுமி ராணியின் கை.  

 கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடந்த உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில், வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்குக்கு லட்சுமி ராணி தகுதி பெற்றார். இதில், தனியாகவும், அணியாகவும் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவின் முன்னணி வில் வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி உள்ளிட்டோர் அடங்கிய அணியில் லட்சுமி ராணியும் இடம் பெற்றிருக்கிறார். லட்சுமி ராணியின் தந்தை நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். துவக்கத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள லட்சுமி ராணியை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. ஆனால் இந்த பொறுப்பை ஏற்று கொண்ட லட்சுமி ராணியின் தாய், கணவரை சமாதானம் செய்து மகளை போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் லட்சுமி ராணியின் தந்தை இனிமேல் நிலக்கரி சுரங்கத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் சமீபத்தில் இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார் லட்சுமி ராணி. ‘எனது தந்தையின் பணி மிகவும் அபாயகரமானது. அந்த தொழிலை அவர் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது தந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளார்’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் லட்சுமி ராணி. லட்சுமி ராணியை நினைத்து அவரது குடும்பம் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து கொண்டிருக்கிறது. தற்போது 27 வயதாகும் லட்சுமி ராணிக்கு இது முதல் ஒலிம்பிக். அழுத்தத்தின் கீழும் சிறப்பாக செயல்படுவது இவரது பெரிய பலம். தொடர்ச்சியாக 10எஸ் ஸ்கோர் செய்வதிலும் லட்சுமி ராணி வல்லவர். அணி போட்டிகளில் இதுவே வெற்றிக்கான சாவியாக விளங்கும். அணியை பேலன்ஸ் செய்வதில் லட்சுமி ராணி முக்கிய பங்காற்றுவார் என்பது அவரது பயிற்சியாளரின் நம்பிக்கை. இறுதி கட்ட பயிற்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய வில் வித்தை அணியுடன் லட்சுமி ராணி பிரேசில் சென்று விட்டார். அங்கு கடின பயிற்சி மேற்கொண்டு வரும் லட்சுமி ராணி, பதக்க மேடையேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் சில
  • கோபிசந்தின் சிஷ்யர்-கிடாம்பி ஸ்ரீகாந்த்



  • நியூசிலாந்து ஆதிக்கம்



  • புரோ கபடி லீக் ஜெய்ப்பூர், பாட்னா பைனலுக்கு தகுதி



  • அமெரிக்காவில் ஆக. 27, 28ல் இந்தியா-வெ.இ. டி.20 போட்டி?



  • 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இந்திய சவாலை வெ.இண்டீஸ் எதிர்கொள்ளுமா ? விஜய்க்கு பதில் ராகுல் களம் இறங்குகிறார்



  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட்டில் ஓய்வுபெற முடிவு



  • பவுலிங், ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் 330 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • ஆசிரிய குடும்பத்தில் இருந்து ஒரு மல்யுத்த வீரர்



  • விராட் கோஹ்லி இல்லை ஜோ ரூட்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் - முகமது யூசுப் கணிப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]