பவுலிங், ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்
7/27/2016 5:22:08 PM
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பவுலர்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் 2வது இடத்தில் இருந்தார். பாகிஸ்தான் சுழல் யாசிர்ஷா, இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் கைப்பற்றியதால் அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் அஸ்வின் வெ.இண்டீசுடன் முதல் டெஸ்ட்டில் 7 விக்கெட் கைப்பற்றியதால் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2வது டெஸ்ட்டில் யாசிர் ஷா விக்கெட் எடுக்காததால் 4 இடம் சரிந்து 5வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டர்சன், பிராடு முறையே 2, 3வது இடம் பிடித்துள்ளனர். இதேபோல் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் முதல் இடத்தில் நீடிக்கிறார். சாகிப் அல்ஹசன், பிலாண்டர் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.