இளம்பெண் கொலை வழக்கு - டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்
7/27/2016 2:40:14 PM
கரூர், - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கே.பிச்சம்பட்டியில் வினிதா(19) என்பவர் 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன்(31), மணிகண்டன் (27) ஆகியோரை மாயனூர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கரூர் விரைவு மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.வழக்கு விசாரணைக்காக கரூர் கோர்ட்டில் நேற்று ஆஜராக வேண்டும் என மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி மகேந்திரனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்ற டிஎஸ்பி நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி குணசேகரன், டிஎஸ்பி மகேந்திரனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.