இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூ.7 கோடியில் நடைபெற்ற சாமியாரின் இறுதி சடங்கு

7/10/2025 2:56:04 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

ராஜ்கார்: மத்திய பிரதேசத்தில் சாமியார் ஒருவரின் இறுதி சடங்கு மிகவும் பிரமாண்டமான முறையில் ரூ.7 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த சமணத் துறவி மத்விஜய் ரவீந்திரசூரி மகராஜ் சாகேஜி (62). சமண சமூகத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஏராளமான இறுதி சடங்குகள்  செய்யப்படுவது வழக்கம். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ராஜ்காரில் மத் விஜய் காலமானார். இவரது இறுதி சடங்குகளை  பிரமாண்டமாக நடத்தி முடிப்பது என ஜெயின் சமூகத்தினர் முடிவு செய்தனர்.  உலகம் முழுவதும் உள்ள தங்களது சமூகத்தினரிடம் இருந்து நன்கொடை வசூலித்தனர்.  துபாயில் வசிக்கும் ஜெயேஷ்பாய் என்பவர் மட்டுமே ரூ.68 லட்சம் அனுப்பினார். இதே போல், பல இடங்களில் இருந்தும் ரூ.42 லட்சம், ரூ.27 லட்சம் என நன்கொடைகள்  குவிந்தன.

ஜெயின் சமூகத்தின் மிகவும் மூத்த துறவி என்று  மத்விஜய் போற்றப்படுகிறார். ராஜ்காரில் உள்ள மோகன்கேதா கோயில் சார்பில் இந்த தொகை வசூலிக்கப்பட்டு  இறுதி சடங்கு மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாசனை திரவியங்கள், அலங்கார பொருட்கள் என அவரது உடலுக்கு இறுதி சடங்கு  அன்று மட்டும் சுமார் ரூ.7 கோடியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், துறவிகள் இறந்தால் பொதுவாக உள்ளூர் ஜெயின் சமூகத்தினர் உடலை நல்லடக்கம் செய்வர்.  ஆனால் இவருக்கு பாரம்பரிய சடங்கை செய்ய வேண்டும் என்று அன்பர்கள் விரும்பியதையடுத்து இந்த சடங்கு இவ்வளவு செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது  என்றார். ரூ.7 கோடிக்கும் அதிகமான செலவில்  முடிக்கப்பட்ட மத்விஜய் இறுதி சடங்கு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் சில
  • இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு



  • கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை



  • பாலியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை பலாத்காரம் செய்த போலி டாக்டர் சிக்கினார்: மசாஜ் என்ற பெயரில் அத்துமீறல்



  • அஞ்சலக துறை ஏற்பாடு: வீட்டிற்கே வரும் கங்கை தீர்த்தம்



  • மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை எதிர்க்க காங்கிரசுடன் கைகோர்ப்போம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு



  • வியாபம் வழக்கு தொடர்பான உயிரிழப்புகளில் மர்மம் இல்லை: சிபிஐ முடிவு



  • பலி எண்ணிக்கை 23 ஆனது: காஷ்மீரில் அமைதி திரும்புகிறது அமர்நாத் யாத்திரை இன்றும் ரத்து; 15,000 பக்தர்கள் தவிப்பு



  • ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் கேரள இளம்பெண்ணின் தாய் முதல்வர் பினராயுடன் சந்திப்பு



  • திருமலையில் கார் மோதி சென்னை பெண் பலி



  • மகாராஷ்டிராவில் உட்கட்சி பூசல்: காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]