இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உடல் சோர்வை போக்கும் மோர்

6/23/2016 2:07:02 PM
சென்னையில் போலீஸ் தீவிர ரோந்து ரவுடி சிடி மணியின் 6 கூட்டாளிகள் கைது: ஆயுதங்கள், கார், பைக் பறிமுதல் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 4 வயது சிறுவன் பரிதாப பலி: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமான மோரின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்ப்போம். பல்வேறு நன்மைகள் கொண்ட மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம். இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம். காலை வேளையில் இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

சோற்று கற்றாழை, மோர் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். சோற்று கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும். கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும்.  சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத்தன்மையை போக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்ளுவதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சி ஏற்படும். இதை சரிசெய்யும் முறையை காண்போம். தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும். பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

மேலும் சில
  • சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்



  • வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்



  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நந்தியா வட்டை



  • மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கும் கட்டுக்கொடி



  • சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரை



  • சளி பிரச்னையை தீர்க்கும் தூதுவளை



  • அல்சரை குணப்படுத்தும் பலா



  • உடல் சோர்வை போக்கும் ஆரஞ்சு



  • உடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை



  • சிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்



Facebook

Twitter

பாலிவுட் போகும் கோலிவுட் ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]