இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

சளி பிரச்னையை தீர்க்கும் தூதுவளை

6/16/2016 2:18:09 PM
பேரவையில் இருக்கை, அறை ஒதுக்கீடு பிரச்னை சபாநாயகருக்கு 2 நாள் கெடு ஸ்டாலின் பரபரப்பு பேட்டி குல்பர்கா சொசைட்டி 69 பேர் கொலை வழக்கு 11 பேருக்கு ஆயுள்; 12 பேருக்கு 7 ஆண்டு சிறை குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் சளி, இருமலை குணப்படுத்துவது குறித்து பார்ப்போம். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்னையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.  

சளி பிரச்னைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம். வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்மா பிரச்னை தீரும்.

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.   இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது. எளிதில் கிடைக்கூடிய விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் முறையை பார்க்கலாம். வீட்டில் இருக்கும் சமயத்தில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டால், சுமார் 6 சொட்டு அளவுக்கு விளக்கெண்ணெய் எடுத்து, தொப்புளை சுற்றி போடவும். இவ்வாறு செய்தால் சிறிது நேரத்தில் வயிற்று வலி இல்லாமல் போகும்.

மேலும் சில
  • சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரை



  • அல்சரை குணப்படுத்தும் பலா



  • உடல் சோர்வை போக்கும் ஆரஞ்சு



  • உடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை



  • சிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்



  • மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் பண்ணைகீரை



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் கறிவேப்பிலை



  • வயிற்றுவலியை குணப்படுத்தும் முலாம் பழம்



  • படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை



  • உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி



Facebook

Twitter

நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]