விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
6/3/2025 2:28:21 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2016 மேல்நிலை தேர்வு எழுதி விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வாளர்கள் scan.tn.dge.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடத்திற்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மதிப்பீட்டிற்கு இதே இணையதள முகவரியில் application of retotalling/revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து தங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து நாளை மாலை 5 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டணத்தை அந்த அலுவலகத்திலேயே செலுத்தலாம். காஞ்சிபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.