திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
5/31/2016 2:23:41 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 1425ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, அனைத்து தாலுகாக்களிலும் ஜூன் 3 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் 1425ம் பசலிக்கான ஜமாபந்தி, ஆவடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மற்ற தாலுகாக்களில் வருவாய்த்துறை அலுவலர்களாலும், வரும் 3ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது.தாலுக்கா இடம், ஜமாபந்தி அலுவலர், நடைபெறும் தேதி விவரம்:ஆவடி கலெக்டர் சுந்தரவல்லி 3, 7, 8, 9, 10. மதுரவாயல் டி.ஆர்.ஓ., முத்து 3, 7, 8, 9. மாதவரம் கருப்பையா 3, 7, 8, 9. திருத்தணி மல்லிகா 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17. பொன்னேரி பெரியசாமி 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 28. திருவொற்றியூர் பார்வதி 3, 7, 8, 9. பூந்தமல்லி முத்துசாமி 3, 7, 8, 9, 10. திருவள்ளூர் சந்தியா 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23. ஊத்துக்கோட்டை ஜெயச்சந்திரன் 3, 7, 8, 9, 10, 14, 15. பள்ளிப்பட்டு சேதுமாதவன் 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17. கும்மிடிப்பூண்டி நாராயணன் 3, 7, 8, 9, 10, 14, 15. அம்பத்தூர் வீரப்பன் 3, 7. ஜமாபந்தி நிகழ்ச்சி பிரதி தினமும் காலை 9 மணிக்கு அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்படும். பட்டா நகல் கோரும் பட்டாதாரர்கள், இதில் மனு கொடுத்து பட்டா நகல் பெற்றுக் கொள்ளலாம். பட்டா மாறுதல் மற்றும் பொது மக்களின் இதர குறைகள் சம்பந்தமான மனுக்களும் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.