இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு

5/26/2016 2:25:48 PM
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன் மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை

கொல்கத்தா:மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில், 211 தொகுதிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸ் 44, கம்யூனிஸ்ட்கள் 32, பாஜ 3 தொகுதிகளில் வெற்றிபெற்றன. திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றதை அடுத்து, மம்தா பானர்ஜி 2வது முறையாக முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். புதிய அரசு அமையவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் நேற்று கொடுத்தார். இதையடுத்து, சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வராக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தற்காலிக சபாநாயகர், அமைச்சர்கள் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகிறது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் இந்தமுறை முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை இருக்கும் என கூறப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் அதிகளவில் இருக்கும் என தெரிகிறது.

நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர்கள் அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழா வழக்கமாக கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிலையில், தற்போது பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கொல்கத்தாவில் உள்ள ரெட் ரோடு பகுதியில் பதவியேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]