இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

5/26/2016 2:21:22 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் அவர் கவர்னராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ரகுராம் ராஜன்  நேற்று சந்தித்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பதவியேற்றார். இவருடைய பதவிக்காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2வது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ரகுராம் ராஜன் தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரிவிதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் மாற்றங்களில் கொண்டுவந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளதாக ரகுராம் ராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரகுராம் ராஜனை மீண்டும் பதவியில் அமர்த்த கூடாது என பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம் ராஜன் தேசபக்தி இல்லாதவர்; அவர் முழுமையான இந்தியர் கிடையாது என சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்திருந்தார்.

ரிசர்வ் வங்கி கவர்னரை நியமிக்கும் முன்பு நன்கு ஆலோசனை செய்து முடிவுக்குவர வேண்டும் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சுப்பிரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், ரகுராம் ராஜனை மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக சுமார் 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டுள்ளனர். இதுகுறித்து அவர் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ரகுராம் ராஜன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்துவரும் நிலையிலும், இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவகையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளார். பொருளாதார வளர்ச்சியில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது’’ என்றார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று  ரகுராம் ராஜன் சந்தித்தார். முன்னதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, ரிசர்வ் வங்கி சார்பில் கொண்டுவரப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, ரகுராம் ராஜன் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.     

மேலும் சில
  • மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]