இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு

5/25/2016 5:08:14 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயல் அலுவலர் சாம்பசிவ ராவ் கூறினார். திருப்பதி அன்னமய்யா பவனில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களின் நலன்கருதி திருமலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காம்ப்ளக்ஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடமைகள் பாதுகாக்கும் லாக்கர்கள் மற்றும் ஓய்வெடுக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காம்ப்ளக்ஸ்கள் மலைப்பாதையில் நடந்துவரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்பட வேண்டும். இதற்கான இடங்களை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

பக்தர்கள் தங்கும் விடுதிகள் பயன்பாட்டின் சதவீதத்தை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி 6, 12, 18, 24 மணி என 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பயன்பாட்டை பதிவு செய்ய வேண்டும். இதற்கான புதிய ‘ஆப்ஸ்’ தயாரிக்க வேண்டும்.
கோயில் உள்ளே தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்துக்கு தேவையான நெய் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இருந்து தேவஸ்தான ஊழியர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பயன்பாட்டு நேரங்களை குறைக்கும் வகையில் கிடங்குகளில் இருந்து நேரடியாக பைப் லைன் வழியாக லட்டு தயாரிக்கும் இடத்துக்கு நெய் கொண்டுச்செல்லப்பட உள்ளது. லட்டு தயாரிக்கும் இடத்தில் உபயோகப்படுத்திய நெய் டின் மற்றும் உபயோகப்படுத்தாத நெய் டின் ஆகியவற்றுக்கு தனித்தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இவ்வாறு சாம்பசிவராவ் பேசினார்.

மேலும் சில
  • மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு



  • ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]