பைக் திருடிய 2 பேர் கைது
5/25/2016 3:56:32 PM
திருவள்ளூர்: பைக் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் வீரண்ணன் தெருவை சேர்ந்தவர் மதுசூதனன்(35). இவர், நேற்று காலை வீரராகவர் கோயில் வெளியே தனக்கு சொந்தமான பைக்கை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், முகமதலி தெரு வழியாக எஸ்.ஐ., இளங்கோ ரோந்து சென்றபோது, இரு வாலிபர்கள் மதுசூதனன் பைக்கை சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்துகொண்டு இருந்ததை கண்டு, அவர்களை கையும், களவுமாக பிடித்தார்.
விசாரணையில், முகமதலி தெருவை சேர்ந்த சேட்டு(25), புல்லரம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(18) என்பது தெரியவந்தது. பைக்கை திருடியதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.