இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சோனியாவுக்கு விசுவாசமாக இருப்போம் ஸ்டாம்ப் பேப்பரில் எம்எல்ஏக்கள் உறுதிமொழி

5/25/2016 3:37:57 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

கொல்கத்தா:சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு விசுவாசமாக இருப்போம் என மேற்கு வங்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் உறுதி மொழி அளித்துள்ளனர்.மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த இடதுசாரி கூட்டணி 32 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததே படுதோல்விக்கு காரணம் என ஒரு சில இடது சாரி தலைவர்கள் மேலிடத்தை விமா்சிக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் இந்த கூட்டணி தொடரும் என இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன. நாளை மறுநாள் மாநில முதல்வராக திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி  பதவியேற்க இருக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரசும், இடதுசாரிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் கட்சி தாவலை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ரூ. 100 ஸ்டாம்ப் பேப்பரில் காங்கிரஸ் மேலிடத்துக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். சோனியாவுக்கும், ராகுல்காந்திக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்போம், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம், கட்சி கட்டளையை மதித்து நடப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சவுத்ரி கூறுகையில், உறுதி மொழி பத்திரம் அளிக்குமாறு எந்த எம்எல்ஏவையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே இந்த உறுதி மொழி பத்திரத்தை அளித்துள்ளனர் என்றார்.

மேலும் சில
  • ஆசியாவில் முக்கிய சக்திகளாக விளங்கும் இந்தியா, சீனா: ஜனாதிபதி பிரணாப் பெருமிதம்



  • எகிப்து விமானம் மாயம்: 66 பேரின் கதி என்ன?



  • இந்தியா-அமெரிக்கா ராணுவ உறவில் மேம்பாடு பென்டகன் தகவல்



  • சட்டீஸ்கரில் பரபரப்பு நக்சல் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் பலி



  • ரூ. 9000 கோடி வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு



  • உத்தரகாண்டில் லேசான நிலஅதிர்வு



  • குறைவான கூலி உயர்வுக்கு எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு ரூ. 5 அனுப்பிய கிராம மக்கள் ஜார்கண்டில் பரபரப்பு



  • ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் பலி



  • சர்ச்சையில் சிக்கியுள்ள அகஸ்டாவெஸ்ட் லேண்டிடம் ராஜஸ்தான் பாஜ அரசு ஹெலிகாப்டர் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை காங். வலியுறுத்தல்



  • அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8ல் பிரதமர் மோடி உரை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]