ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா குத்தாட்டம்
5/23/2016 2:42:43 PM
‘மெட்ராஸ்’, ‘கணிதன்’, ‘கதகளி’ படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா அடுத்து ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கிளாமர் நாயகி என்று பேசப்பட்டாலும் பட வாய்ப்புகள் குறைந்தளவிலேயே உள்ளதால் பிரபல ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை கைப்பற்ற எண்ணி உள்ளார்.ஆரம்ப கட்டத்தில் நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் இல்லாமல் அடுத்த கட்ட ஹீரோக்களுடனே நடித்து வந்தார்.
இந்நிலையில் ரஜினியுடன் ‘சிவாஜி’, விஜய்யுடன் ‘சிவகாசி’ படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இது அவருக்கு பிளஸ் ஆக அமைந்தது. அந்த பாணியை தற்போது கேத்ரின் கையிலெடுத்திருக்கிறார்.சிரஞ்சீவி நடிக்கும் ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் ஏற்கனவே அனுஷ்கா ஹீரோயினாக நடிக்க பேச்சு நடக்கிறது. இதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேத்ரின் தெரசாவை கேட்டபோது ஒப்புக்கொண்டார். இப்படத்துக்கு தேவி பிரசாத் இசை அமைக்கிறார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.