மகேஷ்பாபுவை அலற வைத்த சமந்தா
5/23/2016 2:41:39 PM
மகேஷ்பாபு நடித்த ஒரு படத்தில் பெண்ணை இழிவு படுத்தும் வகையில் சீன் வைத்ததாக கடந்த ஆண்டு சமந்தா கூறியிருந்த புகார் பரபரப்பானது. கோபம் அடைந்த மகேஷ்பாபு ரசிகர்கள் சமந்தாவை இணைய தள பக்கத்தில் காய்ச்சி எடுத்தனர். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘பிரம்மோத்சவம்’ படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வந்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவழியாக அப்பிரச்னையை கடந்து படம் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் மகேஷ்பாபுவை படப்பிடிப்பில் அலற வைத்த சம்பவம்பற்றி சமந்தா குறிப்பிட்டார். ‘தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளுக்கு இடையே நான் கார் ஓட்டிச் செல்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பயந்துகொண்டே ஓட்டினேன். எனக்கு பின்னால் மகேஷ் பாபு அமர்ந்திருந்தார். நான் கார் ஓட்டுவதை கண்டு நடுங்கிய அவர் ‘கடவுளே, இதுதான் என்னுடைய கடைசி நாள்? எனது மனைவி மற்றும் குழந்தையிடம் அவர்களை அன்புடன் நேசிப்பதாக கூறிவிடுங்கள்’ என்று அலறினார். இதற்கிடையில் காரில் எனக்கு தைரியம் சொல்வதற்காக அமர்ந்திருந்தவர்கள் சூழ்நிலையை சாதுர்யமாக கையாண்டார்கள்’ என்றார்.