திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் மக்களை சந்திக்கும் நேரம் அறிவிப்பு
5/2/2025 2:12:00 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மக்களை சந்திக்கும் நேரம், இடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதிகளின் பார்வையாளர் சந்திரேஷ் குமாரை, வல்லூர் என்.டி.இ.சி.எல் சுற்றுலா மாளிகளியில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்கள் சந்திக்கலாம். அவரது செல்போன் எண்- 9445398608. திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளின் பார்வையாளர் டாக்டர். காஜல் பந்தியோபாத்யாயை திருவள்ளூர் சுற்றுலா மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சந்திக்கலாம். செல்போன் எண்- 9445398609 பூவிருந்தவல்லி, ஆவடி தொகுதிகளின் பார்வையாளர் அமித் சவுத்ரியை, ஆவடி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையும், பூந்தமல்லி தாலுக்கா அலுவலகத்தில் மாலை 3 முதல் 5 மணி வரையும் சந்திக்கலாம். செல்போன் எண்- 9445398610.
மதுரவாயல், அம்பத்தூர் தொகுதிகளின் பார்வையாளர் சஞ்சீவ் பட்நாகரை, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் மாலை 3 முதல் 4 மணி வரியும், மதுரவாயல் தாலுக்கா அலுவலகத்தில் மாலை 4 முதல் 5 மணி வரையும் சந்திக்கலாம். செல்போன் எண்-9445398611.மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளின் பார்வையாளர் மிட்டா பந்தியோபாத்யாய், மாதவரம் தாலுக்கா அலுவலகத்தில் காலை 11 முதல் பகல் 1 மணி வரையும், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மாலை 3 முதல் 5 மணி வரையுள் சந்திக்கலாம். செல்போன் எண்-9445398612.இத்தகவலை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.