ஆதனூர் ஊராட்சியில் காங். வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு மலர்விழி தமிழ்அமுதன் பங்கேற்பு
5/2/2025 2:01:18 PM
கூடுவாஞ்சேரி: சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் ஊராட்சியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நேற்று மாலை திமுகவினர் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஊராட்சி கழக செயலாளரும், கிளாசிக் நிறுவன தொழிலதிபருமான தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணை தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் கல்பனா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக, குன்றத்தூர் ஒன்றிய திமுக மகளிரணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழி தமிழ்அமுதன் கலந்துகொண்டார்.ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகையை ஆதரித்து, நேற்று மாலை ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கபாலி நகரில் வீடு வீடாக மலர்விழி தமிழ்அமுதன் உட்பட ஏராளமான திமுகவினர் நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஆதனூர் டிடிசிநகர் போக்குவரத்து கழக பொது செயலாளர் வேல்முருகன், முன்னாள் பொது செயலாளர் வீரராகவன், திமுக கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், ராமதாஸ், பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, சர்வேசன், செல்வமொழி, வெங்கடேசன், பழனி, ஒன்றிய பிரதிநிதி இளங்கோ, ஊராட்சி மகளிரணி நிர்வாகிகள் செல்வி, விஜயா, தாமரைசெல்வி, ஜாகிராபேகம், இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீதர், ரஜினி, ஆனந்தராஜ். மாணவரணி அமைப்பாளர் சூர்யா உட்பட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.