கடலுக்கு அடியில் நீந்தும் வீராங்கனையாகிறார் ராகினி
4/27/2016 2:23:41 PM
அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடத்தில் நிறைய படங் களில் நடிப்பதுடன் விஜயசாந்தி பாணியில் ஆக்ஷன் நாயகியாகவும் நடித்து வருகிறார். நடிப்பு தவிர கடலுக்கு அடியில் பாய்ந்து நீந்தும் பயிற்சியிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஆக்ஷன் படங்களில் நடிப்பதோடு நிஜவாழ்க்கையில் ஆக்ஷன் பெண்மணியாக இருக்க ஆசைப்படுகிறேன். கடலுக்கு அடியில் பாய்ந்து நீந்தும் பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் தொழில் ரீதியான வீராங்கனையாக ஆகிவிடுவேன். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்த பயிற்சியை கற்க தொடங்கினேன். 3 மாதத்துக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளில் உள்ள நீச்சல் ஸ்பாட்களுக்கு சென்று நீந்துவேன்’ என்றார்.