மேக்அப் இல்லாமல் நடிக்க மறுத்த ஹீரோஸ் நடிகரானார் இயக்குனர்
4/27/2016 2:23:07 PM
நேசம் முரளி இயக்கி நடிக்கும் படம் ‘கொள்ளிடம்’. இதுபற்றி அவர் கூறும்போது, ‘மனிதர்களில் 20 சதவீதம் பேர் அழகாகவும் 80 சதவீதம் பேர் அழகில்லாமலும் பிறக்கின்றனர். அழகில்லாதவர்களுக்கு காதல் வரும்போது தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கிவிடுகின்றனர். அதையும் மீறி ஒருவனுக்கு காதலி கிடைக்கும்போது அவனது வாழ்வில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சில ஹீரோக்களை அணுகி அழகை குறைத்துக்கொண்டு, மேக்அப் கூட இல்லாமல் நடிக்க கேட்டபோது மறுத்து விட்டனர். வேறுவழியில்லாமல் அந்த வேடத்தை நானே ஏற்றேன். டெல்டா மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆர்.ராஜகோபால் ஒளிப்பதிவு. காந்த் தேவா இசை. ராசிக், இ.எம்.ஜபருல்லா, ரூபா ஐயப்பன், ஜி.வி.பாஸ்கர் தயாரிப்பு. லூசியா ஹீரோயின். வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்’ என்றார். இப்படத்தின் ஆடியோவை இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ரிலீஸ் செய்தனர்.