படம் பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர் கவுண்டமணி கலாய்ப்பு
4/20/2016 2:55:24 PM
கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. சவுந்தர் ரித்விகா ஜோடி. கணபதி பாலமுருகன் இயக்குகிறார். டி.கண்ணன் ஒளிப்பதிவு. எஸ்.ஏ.அருணகிரி இசை. ஜே.சண்முகம் தயாரிப்பு. இதன் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தானம் ஆடியோவை வெளியிட்டனர். பிறகு கவுண்டமணி பேசும்போது,’என்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் முழுக்க கேரவேனுக்குள் நடக்கும் கதை என்றார். கேரவேனுக்குள் இரண்டரை மணி நேர கதையை எப்படி எடுப்ப என்றதும் கேரவேனுக்கு உள்ளே, வெளியே, அதன் பயணத்தின்போது கதை நடக்கும். இளஞ்ஜோடிகள் காதல், ஆக்ஷன், செண்டிமென்ட் எல்லாம் இருக்கிறது என்றார்.
இப்போதெல்லாம் படங்கள் ஓடுவதில்லை என்கிறார்கள். எப்படி ஓடும்? படம் பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நிறைய படம் எடுக்கிறார்கள். அதற்கு ஏற்ப தியேட்டர் இல்லை. இதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம்போன்ற திரையுலக அமைப்புகள் கலந்துபேசி கட்டுக்குள் கொண்டு வந்தால் படங்கள் ஓடும்’ என்றார். இயக்குனர்கள் சுசீந்திரன், பேரரசு, ராமதாஸ், நடிகர் ஆரி மற்றும் பட குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.