இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

4/9/2025 12:28:04 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

கவுகாத்தி: அசாமில் இறுதி கட்ட தேர்தல் மற்றும் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.அசாமில் இறுதி கட்டமாக 61 தொகுதிகளில் வருகிற 11ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக வாக்குபதிவு அதே நாளில் நடக்கிறது.இன்றுமாலையுடன் அசாமில் பிரசாரம் ஓய்வதால் அங்கு தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல் காங்கிரஸ், பாஜ தலைவர்கள் ஒருவரை ஒருவர் மேடைகளில் வெளுத்து கட்டினர். மக்களை பிளவு படுத்தும் வேலைகளில் மோடி இறங்கியுள்ளதாக சோனியா குற்றம் சாட்ட, அசாம் காங்கிரஸ் அரசு ரிமோட் கன்ட்ரோல் அரசு என மோடி பதிலடி கொடுக்க, பனாமா லீக்ஸ் குறித்து மோடி வாயை திறக்காதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்ப தேர்தல் பிரசாரத்தில் புயல் வீசி வருகிறது.

இறுதி கட்ட தேர்தல் என்பதாலும், அசாமில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் பாஜ அங்கு பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜ கணிசமான வெற்றியை ஈட்டியிருந்ததால், தற்போது சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை ஈட்டி விடலாம் என கனவு காண்கிறது. கடந்த முறை மோடி அலை கை கொடுத்ததை போல, இம்முறை பாஜவுக்கு அவரது பிரசாரம் உதவுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. முதல் கட்ட வாக்குபதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு 81 சதவீதம் வாக்குகள் பதிவானதால், காங், பாஜ ஆகிய இரண்டுமே அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக 31 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. பாங்குராவில் உள்ள சாத்னாவில் அதிகபட்சமாக 10 வேட்பாளர்களும், கேஷ்பூர் தனி தொகுதியில் குறைந்த பட்சமாக 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட வாக்குபதிவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் மம்தா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5ம் கட்டமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள போவானிப்பூரில் நடைபெறும் தேர்தலுக்கு மம்தா போட்டியிடுவதையொட்டி ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். அசாமில் இறுதி கட்ட தேர்தலை மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி உச்சகட்ட பிரசாரம் நடைபெற்றது.

மேலும் சில
  • கேரள கோயில் வெடிவிபத்தில் இறந்த 90 பேர் அடையாளம் தெரிந்தது



  • அசாம் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாக்களிப்பு



  • நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் தீ விபத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு மகாராஷ்டிரா முதலிடம்



  • வெயில் கொடுமைக்கு 7 பேர் சாவு ஆந்திராவில் பரிதாபம்



  • அதி நவீன தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் எல்லையில் ஊடுருவலை தடுக்க 5 அடுக்கு பாதுகாப்பு



  • 2ம் கட்ட தேர்தல் அசாம், மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பான வாக்குபதிவு



  • என்ஐஏ அதிகாரி கொலையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு



  • ஆனந்தி பென் மகள் நில மோசடியைத் தொடர்ந்து குஜராத் பெட்ரோலிய நிறுவன மோசடி குறித்து விசாரிக்க காங். வலியுறுத்தல் மோடிக்கு மேலும் ஒரு தலைவலி



  • தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ. 52 கோடி பறிமுதல் தமிழகம் முதலிடம்



  • பலாத்கார புகார் கூறிய சரிதா மீது உம்மன்சாண்டி மானநஷ்ட வழக்கு



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]