ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
4/9/2025 12:26:07 PM
டாக்டர் வசூல்ராஜா எம்பிபிஎஸ், சண்டியர் போன்ற பட டைட்டில்களுக்கு எதிர்ப்பு எழுந்தன. பிறகு வசூல்ராஜா எம்பிபிஎஸ், விருமாண்டி என பெயர்களை மாற்றி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது தெலுங்கு படமொன்றுக்கு போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டோலிவுட் ஹீரோ ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் ‘மென்டல் போலீஸ்’. இதற்குதான் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பி.பாப்ஜி இயக்கி உள்ளார். படத்தின் டைட்டில், மற்றும் ஆட்சேபரமான காட்சிகள் எல்லாவற்றையும் நீக்க வேண்டும். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீகாந்துக்கு கழுத்தில் செருப்புமாலை போட்டு நடுரோட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற காட்சியும் ஆட்சேபரமாக உள்ளது அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஐதராபாத் போலீஸ் சங்கம், பட ஹீரோ காந்துக்குக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் சட்டப்படி விளக்கம் கேட்டு பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்ரீகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தக்க பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சங்கம் எச்சரித்துள்ளது.