இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது
4/9/2025 12:11:06 PM
இணையங்களின் வரவால் உலகம் இன்றைக்கு உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று சொல்லப்பட்ட போதிலும் நமக்கு தெரிந்த நாடுகளின் எண்ணிக்கையை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் நமது வாய்க்குள் பெயர் கூட நுழையாத நாடுகளும், அவற்றின் வண்ண மிகு கலாச்சார பாரம்பரியங்களும் ஏராளமாக பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றில் லாத்வியாவும் ஒன்று. குறிப்பாக அதன் தலைநகரம் ரிகா மிகவும் வண்ண மயமான நகரங்களில் ஒன்றாகும். சிறப்பான கட்டிட வேலைப்பாடுகளும், அழகிய தெருக்களும், பீச்சும் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. இந்த நகரம் 1201ல் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு. பால்டிக் நாகரிகத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள காபி ஷாப்கள் மிகவும் பிரபலமானவை. ரிகா நகருக்கு காபி குடிப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்ன நாமும் ரிகாவுக்கு ஒரு காபி விசிட் அடிக்கலாமா?