மான்கள் என்றாலே கொள்ளை அழகு
4/9/2025 12:10:02 PM
மான்கள் என்றாலே கொள்ளை அழகு. அதுவும் துள்ளிக்குதித்து ஓடும்போது அதன் அழகே தனிதான். மான்களில் பல்வேறு இனங்கள் உள்ளன. ‘சிகா’ வகை மான்கள் ஜப்பானில் மிகவும் பிரபலம். அங்குள்ள ஆலயங்களில் இந்த மான்கள் அதிகளவில் சுற்றிதிரியும். புனிதமாக கருதுவதால், சிகா மானை யாரும் வேட்டையாடுவது கிடையாது. மான்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வார்கள். சிகா வகை மான்கள் கிழக்கு ஆசியா நாடுகளில் அதிகளவில் உள்ளன. வியட்நாம், ரஷ்யாவிலும் கணிசமான அளவில் உள்ளன. மேற்கண்ட படத்தில் காணப்படும் சிகா மான்கள், ரஷ்யாவில் உள்ள வனப்பகுதியில் உலா வருபவை. கருமை நிறம் கொண்ட இந்த மான்கள் நீண்ட கொம்புகளை உடையவை.