அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்
4/8/2025 2:14:29 PM
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 9 வயது மில்லா பிஸ்ஸோட்டோ. 4 அடி உயரமும் 24 கிலோ எடையும் கொண்ட மில்லா, உடற்தகுதியில் மிகச் சிறப்பானவராகத் திகழ்கிறார். சமீபத்தில் 24 மணி நேர ‘பேட்டில் பிராக்’ என்ற உடற்தகுதி பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார். ‘பள்ளியில் நான் விளையாடவில்லை என்று எல்லோராலும் கிண்டல் செய்யப்பட்டேன். இதைத் தொடர்ந்து, நான் வாரத்தில் 5 நாட்கள், தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி செய்தேன். ஓடுதல், குதித்தல், நீந்துதல், மலையேறுதல், பளு தூக்குதல் என்று 25 விதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மட்டுமே தூங்குவேன். என் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துவிட்டது.உலகிலேயே 9 வயதில் இந்தச் பேட்டில்ஃப்ராக் சோதனையை வென்ற முதல் சிறுமி நான் என்ற சாதனையை நிகழ்த்திவிட்டேன். ஆரோக்கியமான உணவு, வலிமையான உடல், கிண்டல்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்த மூன்றை மட்டும் என்னிடமிருந்து கற்றுக்கொண்டால் போதும்’’ என்கிறார் மில்லா.