வியட்நாம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்
4/8/2025 2:12:50 PM
வியட்நாம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர், அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய 3 பேருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது. பல்வேறு அரசியல் விவகாரங்களில் 19 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக்குழுதான் முடிவுகளை எடுக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் வியட்நாமின் புதிய அதிபராக போலீஸ் துறை தலைவர் டிரான் டாய் குவாங் (59) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நிவென் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்த நிகுயென் சூவான் புக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக வியட்நாம் பாராளுமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நிகுயென் பிரதமராக பொறுப்பேற்றார்.இதுகுறித்து நிகுயென் சூவான் புக் கூறும்போது, ‘எனது நாடு பல்வேறு வகைகளில் முன்ேனறுவதற்கு, என்னால் முடிந்த அளவுக்கு நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வேன்’ என்று உறுதி கூறினார்.