நவீன யுகத்தில் ரோபோக்களின் பயன்பாடு
4/8/2025 2:12:08 PM
நவீன யுகத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வீடுகளில், நிறுவனங்களில் சில வேலைகளுக்காக ரோபோக்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கால்பந்து விளையாடுவது போன்ற ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஈரானில் உள்ள தெக்ரானில் நடைபெறும் சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியில் ரோபோக்கள் பங்கேற்கின்றன. கடந்த 6ம் தேதி இந்த போட்டிகள் தொடங்கின. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 350 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், ஈரான், ஜெர்மனி அணிகள் இடையேயான போட்டி தெக்ரானில் நடைபெற்றது. ரோபோக்கள் கால்பந்து விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.